அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை

குறிப்பு1) 2019ம் ஆண்டு திருக்கல்யாணத்தினை தரிசிப்பதற்காக திருக்கல்யாண நுழைவு கட்டணச்சீட்டினை பெற விண்ணப்பிக்கப்படும் படிவம் ஆகும்.


2) விண்ணப்பங்கள் 08.04.2019 முதல் 12.04.2019 முடிய மட்டுமே ஆன்-லைனில் பதிவு செய்ய இயலும்.


3) ஒருவர் ரூ.500/- மதிப்பிலான கட்டணச்சீட்டு ஒரு பதிவில் ஒருவர் இரண்டு கட்டணச்சீட்டுக்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.


4) ஒருவர் ரூ.200/- மதிப்பிலான கட்டணச்சீட்டு ஒரு பதிவில் ஒருவர் மூன்று கட்டணச்சீட்டுக்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.


5) முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


6) விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.


7) 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டணச்சீட்டு வாங்க வேண்டும். பிறந்த தேதி சரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.


8) ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே, ஒரு கைபேசி எண்ணீல் நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது.


9) அனுமதிக்கப்பட்ட பார்வைகளின் எண்ணீக்கை இடத்தினை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் திருக்கல்யாண பார்வையாளர் தேர்வானது விண்ணப்பித்துள்ள பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் (random) முறையில் தேர்வு செய்தது உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் (Confirmed Message) பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு (13.04.2019)ந் தேதிக்கு பிறகு அனுப்பப்படும்.


10) பதிவு செய்த விண்ணப்பங்களுக்கு 13.04.2019 பிறகு முறையாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டணச்சீட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண் மற்றும் மின்அஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.


11) கட்டணச்சீட்டு ஒதுக்கீடு செய்தி பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் ஆன்லைனில் தாங்கள் பதிவு செய்ய கட்டணச்சீட்டிற்கு உரிய தொகையினை செலுத்தி உறுதி செய்யப்பட வேண்டும். இல்லையெனில் 24மணி நேரத்திற்கு பிறகு ஒதுக்கீடு தானாகவே காலாவதியாகி விடும்.


12) கட்டணச்சீட்டு ஒதுக்கீடு செய்தி பெறப்பட்டவர்கள் ஒதுக்கீட்டிற்குரிய குறியீடு மற்றும் பதிவு செய்த கைபேசி எண்ணை ஆன்-லைனில் தெரிவித்து அதற்குரிய தொகையை செலுத்தி, பின் வரப்படும் நகல்சீட்டினை 13.04.2019 ந் தேதி பிற்பகல் முதல் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுத்து, உரிய அசல் கட்டணச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.


13) ஆன்-லைனில் கீழ்க்கண்ட வங்கிகளின் net-Banking / Debit Card/ Credit Card (Visa/ Master) மூலமாக தொகை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 


14) ஆன்-லைனில் தொகை செலுத்த விரும்பும் நபர்கள் தங்களது ஒதுக்கிட்டிற்குரிய குறியீடு மற்றும் பதிவு செய்த கைபேசி எண்ணினை இணையதளத்தில் பதிவு செய்து, அதற்குரிய தொகையை செலுத்தி, பின் வரப்படும் தொகை செலுத்தியமைக்கான சீட்டினை 13.04.2019ந்தேதி காலை 10.00 மணி முதல் 16.04.2019 மாலை 7 .00 மணி வரை மதுரை, மேலச்சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஸ்ரம் தங்கும் விடுதி வரவேற்பறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மையத்தில் கொடுத்து உரிய அசல் கட்டணச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.


சிறப்பு நிகழ்வாக வெளியூரில் வசிக்கும், உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்கப் பெற்று ஆன்-லைன் முலமாக தொகை செலுத்திய நபர்களுக்கு மட்டும் பிர்லா விஸ்ரம் தங்கும் விடுதி வரவேற்பறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனை மையத்தில் 17.04.2019ந்தேதி காலை 04.00 மணி முதல் காலை 7 .30 மணி வரை தொகை செலுத்தியமைக்கான சீட்டினை காண்பித்து கட்டணச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்


15) திருக்கல்யாணம் (17.04.2019) காலை 09.50 மணி முதல் 10.14 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 06.30 மணி முதல் 08.00 மணி வரமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.


16) ரூ.500/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு இராஜகோபுரம் முனீஸ்வரர் சன்னதி ஒட்டிய வழியில் அனுமதிக்கப்படுவர்கள்..


17) ரூ.200/- மதிப்பிலான கட்டணச்சீட்டு பெற்றவர்கள் திருக்கோயில் வடக்கு இராஜக்கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.


18) திருக்கல்யாண கட்டணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு செய்து வழங்குவது குறித்து முடிவு செய்வது திருக்கோயில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.


திருக்கோயில் நிர்வாகம்.
Top